என் வீட்டு சுவரில் இருந்து………………
0
அப்பா
-
அம்மா இல்லத்தின் தன்மானம் என்றால், அப்பா வீட்டின் அடையாளம்…
அம்மா ஊட்டுவது அன்பு ;
அப்பா காட்டுவது மனத் தெம்பு…
நாளும் பொழுதும் உணவள்ளிப்பவள் அம்மா . ஆனால்
அந்த உணவைச் சம்பாதித்து தருவது
அப்பா என்பதை ஏனோ மறந்தே போகிறோம்!
கல்லில் இடரும்போது வாயில் வரும் வார்த்தை “அம்மாடியோ”
காரில் மோதி விழும்போது கூவி அழைக்கிறோம் “ஐயோ அப்பா”
ஏனெனில் சின்னச் சின்ன துன்பங்களில் தேடுவது அம்மாவின் அன்பு
ஆனால் பெரிய துன்பங்களில் துணைநிற்பது அப்பாவின் ஆதரவு.
அப்பா ஒரு நெடிய ஆலமரம். அவர் தரும் குளிர்நிழலே குடும்பம்
அனைத்துக்கும் எபோழுதும் அடைக்கலம்
சுவரை வைத்து சித்திரம் வரையலாம் என்பார்கள் நீங்கள் ஒரு படி மேலே போய் கவிதை எழுதிவிட்டீர்கள்! பெற்றோர்களை புகழும் கவிதைகள் அரிது. உங்கள் கவிதை அருமை.
நெருப்பு நரி — January 13, 2009 @ 1:24 pm