எண்ணங்கள் எழுத்தாக






         

November 10, 2008

கல்யாணம்

Filed under: Uncategorized — kutty @ 5:54 pm
0
Digg me

கல்யாணம் – புது வாழ்க்கை தொடங்க போகிறது என்று மகிழ்ச்சியில் :) மிதப்பதா அல்லது பெற்றோர்களை பிரிந்து இருக்க போகிறோம் என்று வருத்த படுவதா :( ?????????

எங்கள் வீட்டில் நான் , என் அக்கா தான்.அக்காவிற்கு இந்த வருடம் டிசம்பர் மாதம் வந்தால் கல்யாணம் ஆகி இரண்டு வருடம் முடியும். எல்லா தந்தைக்கும் இருக்கும் கடமை தான் என் தந்தைக்கும் “பெண்ணை நல்ல இடத்தில் கட்டி கொடுக்கவேண்டும் ………”. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் , பார்த்து கொண்டே இருந்தார். அவர்க்கு அப்போ நினைவு இல்லையோ என்னவோ எங்கள் வீட்டில் ரெடிமேட்(readymade :D ) மாப்பிள்ளை இருப்பது( அவருடைய அக்கா மகன்) :) . என் அக்காவிற்கு அவள் அத்தை மகனை கட்ட தான் ஆசை. எல்லா தந்தை போல் என் தந்தையும் எதிர்த்தார், இவர் மட்டும் விதிவிலக்கா என்ன!!!!!!!!!. முதலில் எதிர்த்தாலும் பிறகு ஒத்து கொண்டார்.

நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்தது. கல்யாண தேதியும் குறித்தார்கள். என் அக்கா அத்தை மகனை தானே கட்டிக்க போறான்னு கவலையே இல்லாமல் சந்தோஷமாக இருந்தேன் . கல்யாணத்தன்று மாமா தாலி கட்ட போனார் , அவளோ தான் என் கண்களில் இருந்து மல மலவென கண்ணிர் கொட்டியது :( . ஆனந்த கண்ணிரா அல்லது இனி என் அக்கா முன்பு போல் நம்மோட இருக்க மாட்டாள் என்று நினைத்து கண்ணிர் வந்ததா !!!!!!!!! என்னகு புரியவில்லை………….. இன்னும் புரிய வில்லை ஏன் அழுதேன் என்று.

இந்த வருடம் தீபாவளி அன்று வந்தாள். மதியானம் வந்து கொஞ்சம் நேரம் தான் இருந்தாள் , அப்புறம் மாலை சீகிரமாக சென்று விட்டாள். அவளுடைய தலை தீபாவளிக்கும் போன வருடம் வந்து பொய் விட்டால்,அப்போ என்னகு ஒன்றும் தெரியவில்லை ஏன் என்றால் என்னகு தேர்வு இருந்தது , நானும் அவளை சட்டை பண்ணவில்லை.ஆனால் இந்த வருடம் என்னக்கு தேர்வு இல்லை , அவளும் இல்லை என்னால் அந்த பிரிவை தாங்க முடியவில்லை. ஏன் தாங்க முடியலேன்னு சொன்னா அவள் வீட்டை விட்டு செல்லும்போது சிவந்து கண்களோடு சென்றாள் . என்ன தான் சொந்தத்தில் கட்டி குடுத்தாலும் அவளால் இங்கு நிறைய நாள் தங்க முடியவில்லை ஏன் என்றால் விடுமுறை நாட்களும் கம்மி ,அத்தோடு இல்லாமல் அவளுக்கு என்ற குடும்பம் இருக்கிறது.

எவன் தான் கண்டு பிடித்தானோ தெரியவில்லை பெண் அவள் புகுந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று (அவன் மட்டும் என் கையில் சிக்கினா கொன்னே போட்டுவிடுவேன் :D ). அப்பிடி இருந்தால் தான் இந்த சமுதாயத்தில் மரியாதையும்
கூட!!!!!!!!! இதை எல்லாம் பார்க்கும்பொழுது கல்யாணம் தேவை தானா என்று நான் யோசிக்கிறேன் ……………………………… :(



No Comments »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

You must be logged in to post a comment.

WPMU Theme pack by WPMU-DEV.