எண்ணங்கள் எழுத்தாக






         

March 14, 2009

தமிழக அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது ??????

Filed under: Uncategorized — kutty @ 8:04 pm
0
Digg me

என்ன செய்து கொண்டுஇருகிறது தமிழக அரசு????????? இன்னும் எங்கள் கல்லூரி திறக்கவில்லை …………………………கடந்த மாதம் 1ம்( feb 1st) தேதியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளை இலங்கை பிரச்சனையால் கால வரை இன்றி மூட அரசு உத்தரவு விதித்தது. பிறகு 10ம் தேதி அனைத்து பொறியில் மற்றும் மருத்துவ கல்லூரிகளை திறந்து விட்டார்கள்.இரண்டு நாட்கள்ளுக்கு பிறகு வேறு பல கல்லூரிகளும் திறக்க பட்டன.

எல்லா கல்லூரிகளும் இயங்கி கொண்டு இருக்கிறது, ஆனால் இன்னும் சட்ட கல்லூரிகள் திறக்கவில்லை !!!!!!!!!!!!!!!!!!!!! கடந்த மாதம் 23ம் தேதி திறந்து விடும் என செய்திகள் வந்தன.அப்பொழுது தான் வக்கீல்களுக்கும் காவலர்கல்லுக்கும் அதிரடியான சண்டை நடந்தது.இந்த பிரச்சனையால் சட்ட கல்லூரிகள் திறக்கவில்லை.இன்னும் திறக்கவில்லை ………………………… :(

இதற்கு இடையில் எங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் இன்னும் ஏன் திறக்கவில்லை என்று வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.அதற்க்கு நீதிமன்றம் இன்னும் சட்ட கல்லூரி ஏன் திறக்கவில்லை என்று, இந்த வழக்கில் அரசு பதில் அளிக்க இரண்டு வாரம் அவகாசம் கொடுத்தது.இரண்டு வாரம் கெடு முடிந்தது ஆனாலும் இன்னும் அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை………………………………………

நேற்று தான் சட்ட பல்கலைகழகம் தேர்வு முடிவுகள் வெளியிட்டனர் .இன்று அதிசியமாக “அம்மா” அவர்கள் சட்ட கல்லூரியை திறக்க தமிழ்நாட்டு அரசுக்கு கோரிக்கை அளித்தார் (அதற்க்கு மிக்க நன்றி). வரும் வாரமாவது கல்லூரி திறக்கும்மா என்று காத்து கொண்டு இருக்கிறோம் ??????????????



No Comments »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

You must be logged in to post a comment.

WPMU Theme pack by WPMU-DEV.