எண்ணங்கள் எழுத்தாக






         

September 12, 2009

ஆரோகியமாக கொறிக்க !!!!!!!!!!

Filed under: Uncategorized — kutty @ 1:51 pm
0
Digg me

நீங்கள் அதிகமாக நொறுக்கு தீனி தின்பவரா????? கட்டு படுத்த முடியவில்லையா?????? கவலை வெண்டாம், ஆரோகியமாக கருக்கு முருக்குவென கொறிக்க நீங்கள் செய்யவேண்டியது அனைத்திலும் ஒரு பிடி தான் :)

வேர்கடலை, பொட்டுகடலை,வறுத்த பட்டாணி, வறுத்து கொண்ட கடலை,அவல், காய்ந்த திராட்சை, பருப்புகள் – பாதாம், பிஸ்தா, முந்திரி (எல்லா பருப்புகளில் 5 அல்லது 6 எடுத்து சிறிது சிறிதாக உடைத்து கொள்ளுங்கள்) . இவை அனைத்திலும் ஒரு கை பிடி அளவு மற்றும் சிறிதாக உடைத்த பருப்புகளை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள். எப்பொழுது எல்லாம் கருக்கு முறுக்கு என தின்ன தோன்றுகிறதோ இதை நீங்கள் கொறிக்கலாம். இத்துடன் வேண்டும் ஆனால் பொறி மற்றும் வெல்லம் சேர்த்து கொள்ளலாம். வெல்லத்தில் இரும்புச் சத்து உள்ளது. இதே போல் பச்சை காய்கறிகளிலும் கலவை செய்து தினமும் சாப்பிடலாம் :)

இக்கலவையை ஒரு நாள் அல்லது ஒரு வாரத்திற்கு மற்றும் கலந்து வைத்துக்கொள்ளுங்கள் .அதற்க்கு மேல் கலந்து வைத்தால் கெட்டு போக வாய்ப்பு உள்ளது ஏன் என்றால் வேர்கடலைகளில் சிக்கு வாடை அடிக்க ஆரம்பித்து விடும்.பிறகு கலவையிலும் வாடை வந்து சாப்பிட முடியாமல் போகலாம்.

பி.கு : பருப்புகள் ஒரு நாளில் 2 மட்டுமே சாப்பிட வேண்டும் ஏன் என்றால் அவைகளில் கொழுப்பு சத்து நிறைந்து உள்ளன.



No Comments »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

You must be logged in to post a comment.

WPMU Theme pack by WPMU-DEV.